விலைவாசி ஏற்றத்தால்
வீதியிலே மக்கள்
கலையிழந்த முகங்களிலே
கவலையான சொற்கள்
கலையுயர்ந்த நம்நாட்டில்-கள்வரைக்
களையெடுத்தால் போதும்
காளைகள் படை திரண்டால்
இந்நிலை மாறும்..
கூன்விழுந்த ஏழைகளின்
குறுக்கில் கூட்டிக் கணக்கெழுதும்
பாவிகளை, சுபபோகிகளைக்
களையெடுத்தால் போதும்…
நீதி வழுவிய இந்நாடு
நிதியிலும் வழுவி விட்டதாம்
அடுக்கடுக்காய் வரிபோட்டால்
கொடுக்கவா முடியும்?
அரசிடம் வழக்கு தொடுக்கவா முடியும்
மறுமொழியொன்றை இடுங்கள்