மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்27, 2009

விட்டு விடுதலை காண் கிளியே…


விட்டு விடுதலை காண் கிளியே – கூண்டைவிடுதலை
விட்டு விடுதலை காண்…
சுதந்திரக் காற்றில்லா
தமிழனைப் போல நீ
எத்தனை நாள் வாழ்வாய்? கிளியே
எத்தனை நாள் வாழ்வாய்…

மெத்தப் படித்த நம் பண்டிதர் சொல்வதை
எத்தனை நாள் கேட்பாய் ‍கிளியே //
உனக்கெனத் தனியிடம்
தமிழ்க்கெனப் புதுயுகம்
என்று படைப்பாயோ – கிளியே
என்று படைப்படோயோ ‍

மாற்றுக் கருத்திற்கு
மாலையும் பத்தியும்
ஏற்றி வளர்ப்பதேனோ கிளியே //
சொந்தங்கள், சாதியப் படைகளை
எழுத்தாணி கொண்டு
சொறிந்து கொள்வதேனோ கிளியே //

விளையாட்டுப் பிள்ளைகள்
விதைத்த பயிர் போல
ஆனதல்லோ இயக்கம் – அறுவடை
ஆகலையே தாயகம்
ஆக்கப் பொறுக்காதோர், ஆப்பசைத்த கதை
ஆண்டாண்டாய் அறிவோமே – கிளியே //

வீரத்தமிழன் சாகலயும்
கேட்பதில்லை உயிரை – பிச்சையாய்க்
கேட்பதிலை உயிரை
மானத்தைக் கொன்று, தலைவனை விற்று
மாண்டவர் நீங்களன்றோ- உயிரோடு
மாண்டவர் நீங்களன்றோ…

அண்ணனும் தம்பியும் அடிபட்டுச் செத்தால்
லாபம் யாருக்கடா? – சிந்தி
அவமானம் யாருக்கடா – சிந்தி
உங்கள் வீரத்தைக் காட்ட, பரதேசத்தைப் போக்க
விலைக்கே விற்று விட்டீர்…- தாயகத்தை
விலைக்கே விற்று விட்டீர்..


Responses

  1. அருமையான கவிதை. வாழ்த்துகள் அமுதன்

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி பிரேம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: