மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்17, 2009

தாய்மை…


பெண்மைக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பெரும் பரிசே தாய்மை. இருப்பினும் இந்த பரிசே, பல இடங்களில் அவளைப் பரிசுகேடுக்கும் உள்ளாக்குகிறது. தாய், தன் சேயை வளர்க்க தன்னையே அடிமைப்படுத்திக் கொள்கிறாள். தனக்கான எல்லா சுகங்களையும், தூக்கியெறிந்துவிட்டு, தன்னையே உருக்கி, தன் மக்களை வளர்க்கும் தாய்க்கும், தாய்மைக்கும் நாம் திருப்பிக் கொடுக்கும் பரிசு என்ன?

தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள் தாய்மை

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் – பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலேஅமுதன்
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ…?


Responses

  1. உங்களுடைய வரிகள் மனதை வருடிச் செல்கிறது.
    வாழ்த்துக்கள்.

  2. Hi, this is my first visit here. Very nice poem. A few years back I had read a poem in aval vikatan “kanne un marakudira”, which is a mother waiting for her kid to return from school. it was too good .. written by sa yi ra. i have been trying to get that poem or more poems by that poet online, but in vain. do u know that poet?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: