கருவாக நெஞ்சிலே கொண்டேன் உன்னை
கழுவிலே ஏற்றிக் கொன்றாய் என்னை
முழுநாளும் உன்நினைவாய் உள்ளேன் பெண்ணே
இதையுணர உன் இதயத்திற் கில்லையா கண்ணே…
உணர்வலைகள் நீதான் உயிரே என்றேன்
சகலமும் நீதான் சகியே யென்றேன் – என்
சரித்திரம் நீயென உரைத்த பின்னும் – நான்
தரித்திரம் ஆனதன் கதை சொல்லடி…
அழைக்கும் முன்பே நான் நாடி வந்தேன் – உன்
வருகை எதிர்பார்த்தே தேடி நின்றேன்
உயிரில் உயிராக உறைந்த பின்னும்-என்
கருவைக் கலைக்க உன் மனமொத்தத்தோ?
ஆண்மையின் ஸ்பரிசங்கள் புரிதல் கொண்டாய்
பெண்மையின் வாசத்தை விட்டுச் சென்றாய்
விண்ணென்று விண்ணென்று விண்முட்டி செல்கையிலே
விட்டொழித்தேன் உனையென்று வெட்டிச்சென்றாய்…
அருமையான் வரிகள்.
By: viji on ஜனவரி30, 2009
at 1:05 பிப