எதற்காக இறைவா…
எனக்கான வரங்களை மட்டும்
தர மறுக்கிறாய்…
அவளைப் பற்றிய
கசப்பான எண்ணங்களை – என்
கவிதைக்கு கருவாக்கி விடாதே…
நான்கு நாட்களுக்குள்ளா என்கிறாளே…
பேசிய நான்காவது நிமிடத்திலேயே
காதல் பெருவெடிப்பு –
என் இதயத்தை பிளந்து
நரம்புகளில் நாணேற்றியதை…
நீ அறிவாய் தானே
அவள் அழைக்க மறந்த நாட்களில்…
நான் மட்டுமல்ல
என் அலை பேசியும் உயிர் வாழவில்லை
அவளுடன் பேசிய நாட்களை
பழகிய நாட்களை
மறக்கச் சொல்கிறாளே
வறட்சியில் உதிர்த்து
வசந்தத்தில் பூக்க…
நான் என்ன மரமா…
எதற்காக இறைவா…
எனக்கான வரங்களை மட்டும்
தர மறுக்கிறாள்…
மணி நவின்றது:
மனதை உங்கள் வார்த்தைகள் தொடுகின்றன… வாழ்த்துக்கள்.
அமுதன் நவின்றது:
உங்கள் வருகைக்கும், பதிவிற்கும்,
மேலான கருத்திற்கும் நன்றி மணி
By: mahatmamani on ஜனவரி20, 2009
at 9:42 முப