மன்னார் அமுதன் எழுதியவை | ஜூன்29, 2007

என் கிராமம்…


இதோ…
என் கிராமம்…
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும்…
பாதுகாப்பின்றி….

விரட்டியடிக்கப் பட்ட நாங்கள்
இன்றும் கிராமத்திற்குள்
விருந்தாளிகளாகவே பிரவேசிக்கிறோம்…

ஆங்காங்கே வெடிப்புகளோடும்
கார்கில் வீரனைப் போல்…
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கும்
செல்லடி பட்ட வீடுகள்…

அம்மா வைத்த
தென்னம் பிள்ளைகள்…
பீரங்கிகளுக்கு முட்டுக்-
கொடுக்கப்பட்ட வண்ணமாய்…

வயல் வெளிகள் மட்டும்
Graphics பசுமையோடு…
இராணுவக் கூடாரங்களின் ஆக்கிரமிப்பால்…

நான் உறுண்டு விளையாடிய மண்…
பதுங்கு குளிகளுக்குள்
அடுக்கப்பட்ட மூட்டைகளாக….

அதோ…
நான் வளர்த்த நாயின் குட்டிகள்
அதே முகச் சாயலோடு…
இரானுவத்திற்கு வாலாட்டிக்கொண்டு
என்னைப் பார்த்துக் குலைக்கிறது…

அடிக்கத் தோன்றாமல் – நான்
வீசிய ரொட்டித் துண்டுகளை
தின்றுவிட்டு…
எனக்கும் வாலாட்டுகிறது…
சர்வதேசத்தைப் போல்…

சிதறிய எலும்புகளாய் –
கண்ணி வெடிகளில் சிக்கிய
கால்நடைகள்…

வெறும் இறகுகளாய்க்
காற்றில் பறந்து திரியும்-
என் சண்டைக் கோழிகள்…

செல் வீழ்ந்த இடங்கள்
இன்னும் மூடப்படாத – பள்ளமாய்…
தமிழனின் காய்ந்து போன இரத்தம்
இன்றும் கழுவப்படாமல்…
இராணுவத்தின் ஆக்கிரமிப்பைப்
பறைசாற்றுகின்றன…

சோதனை என்ற பெயரில்
கிராமத்துப் புழுதியும் தட்டிவிடப்பட
விடைபெறுகிறேன்- இராணுவ முகாமிலிருந்து

இதோ……
என் கிராமம்…
உயர் பாதுகாப்பு வலையத்திற்குள்ளும்…
பாதுகாப்பின்றி….


Responses

 1. திருமதி.சந்திரவதனா நவின்றது:

  //விரட்டியடிக்கப் பட்ட நாங்கள்
  இன்றும் கிராமத்திற்குள்
  விருந்தாளிகளாகவே பிரவேசிக்கிறோம்…//

  மனதைத் தொடும் வரிகள்.

  நட்புடன்
  சந்திரவதனா

  *******************

  அமுதன் நவின்றது:

  திருமதி.சந்திரவதனா அவர்களே,

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

 2. kangalil kannir thuli
  un kavithai paditha ennil

  naan unarkiren
  anubavitha un kannil kattayam reththa thuli
  irunthathu endru.

  arumaiyana kavithai manathai vaattukindra varigal.

  Manithaa!
  neerum neruppum
  seerum iyarkaium
  azhithalai kaattivarum
  ich suulnilaiil
  kundu mazhi peyya thudikkum Manithaa
  ethai saathikka intha poor?????????????
  vidi illa kelvi thaane ithu…………..

 3. Dear Amuthan,
  engal valikal ungal varththaikalil therikirathu.
  ungal eluththukal thodara valththukiren.
  oppila
  ***************************

  டெல்லியிலிருந்தாலும் தமிழுணர்வோடு இருப்பது தான் தமிழரின் தனித்துவம் என்பதை வெளிப்படுத்தி உள்ளீர்கள்

  நன்றி oppila,

  உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்..

  அமுதன்

 4. really nice, I ‘ve read most of your poems in your site , You have a great talent friend, keep it up

  Jeni

  ————————————–

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும், மனம் திறந்த பதிவிற்கும் நன்றி ஜெனி

  தாங்கள் facebook தோழி என்பதை அறிவேன்.

  உங்கள் பின்னூட்டமே என் வளர்ச்சி.

  பணிவன்புடன்
  அமுதன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: