மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்30, 2007

என் தோழி, என் காதலி, என் மனைவி


c51ff67aab1.jpg

சட்டத்தைப் போலவே
நானும்
இருட்டாகத் தான் உள்ளேன்…
இருண்ட உன் நினைவுகளோடு.
***********************
தவறான கருத்தையே
கண்ணில் கட்டிக்கொண்டு
உன் காதல் தராசில்
எடை போட்டால்
குறைவாகத் தானே இருப்பேன்
உன் நினைவுகளில்.
***********************
சாலையோரப் பூக்கள் தான்
எத்தனை பாக்கியம்
செய்தவை?
நிலைகுத்திய உன் பார்வை
நிர்ணயிக்கப் படுவது
அவற்றின் மேல் தானே
***********************
இப்போதெல்லாம்
உன் பார்வைக்கு – நான்
தீண்டத் தகாதவனாகி
விட்டேனே
***********************
நீ அனுப்பிய
கடிதத்தில்
குத்தப்பட்ட முத்திரையால்
சிதைந்தவை உன் எழுத்துக்கள்
மட்டுமல்ல
என் இதயமும் தான்
***********************
உன் நினைவுகளோடு
கரைந்து கொண்டிருப்பது
நான் மட்டுமல்ல
என் பேனாவும் தான்
***********************
காலம் கடந்த பின்
காதல் பிறந்தால்…
என்னை வேறெங்கும் தேடாதே…

   உன்
 மனமூட்டையின்….
 எங்கேனும்  சிறு
 இருட்டு மூலையில்
 ஒடுங்கிப் படுத்திருக்கும்
 என் நினைவுகள்
 உன்னைச் சுமந்துகொண்டு…
 ***********************
அப்பொழுதும்
 நான்…
 நத்தையைப் போலவே…
 உன் நினைவுகளை – என்
 மனக்கூட்டினில் சுமந்து கொண்டிருப்பேன்.
 ***********************


Responses

 1. 2 Good

  *****************

  நன்றி.

 2. //சட்டத்தைப் போலவே
  நானும்
  இருட்டாகத் தான் உள்ளேன்…
  இருண்ட உன் நினைவுகளோடு.//

  அசத்தலான ஆரம்பம் அமுதன்..

  //சாலையோரப் பூக்கள் தான்
  எத்தனை பாக்கியம்
  செய்தவை?
  நிலைகுத்திய உன் பார்வை
  நிர்ணயிக்கப் படுவது
  அவற்றின் மேல் தானே//

  அடடா… நல்ல வர்ணனை.. ஏக்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்..

  //காலம் கடந்த பின்
  காதல் பிறந்தால்…
  என்னை வேறெங்கும் தேடாதே…

  உன்
  மனமூட்டையின்….
  எங்கேனும் சிறு
  இருட்டு மூலையில்
  ஒடுங்கிப் படுத்திருக்கும்
  என் நினைவுகள்
  உன்னைச் சுமந்துகொண்டு…//

  ஆரம்பத்திற்கேற்ற முடிவு..

  ஒரு முடிவோடு தான் களம் இறங்கியிருக்கிறீர்கள் போல..

  வாழ்த்துக்கள் அமுதன் உங்கள் காதல் கைகூட… 😉

  —————————————–
  நீங்கள் மிகவும் ரசனையுடன் கவிதையை உள்வாங்கியுள்ளீர்கள். நன்றி.
  கவிதை எழுதும் நாம் ஒவ்வொருவரும் காதலிக்கிறோம்.
  இதைத் தான் என்று விதிவிலக்கில்லாமல் எல்லாவற்றையும்
  காதலிக்கிறோம். ஆனால் காதலிக்கப்படுகிறோமா என்று பார்த்தால்
  ? மட்டும் தான் மிச்சம்

 3. very nice

 4. nanbaa!

  thozhi, kathali, manaivi ivarkalai sariyaga adayalam theriya therintha oruvan kattayam
  kadhalikka thagunthavan. kattayam kadhalikka padubavan


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: