மன்னார் அமுதன் எழுதியவை | மார்ச்13, 2007

என் தோழி


c8f89c4ff3.jpg

என் நினைவுகளில் இன்னும் – நீ
மறக்கடிக்கப்படாத கவிதையாய்
………………………………………………………………………………………………
வண்ண வண்ண உடைகளில்லை
பெரிதாக ஒப்பனையும் இல்லை…
எனினும் எது என்னை
நிலை குலையச் செய்கிறது…
……………………………………………….
முக்காடினால் மூடப்பட்ட
முழு நிலவா…
………………………………………………..
அடிக்கடி பார்வையைப் பறிக்கும்
“Signal” சிரிப்பா…
………………………………………………..
பார்த்தால் பார்க்கட்டும் என்று
எட்டிப் பார்க்கும் – பிஞ்சுப்
பத்து விரல்களா…
…………………………………………………
கறுப்பும் அழகு தான் என
உன் உடை பார்த்து அறிந்ததாலா…
………………………………………………..
குத்தி விடுமோ என நான்
துடிக்கும் போதெல்லாம்
லாவகமாய் நீ சொருகிக்கொள்ளும்-உன்
தோள்பட்டைக் குண்டூசியா…
…………………………………………………
எதை நான் ரசித்தேன்…
எதில் நான் எனையே மறந்தேன்…
…………………………………………………
அன்று உனைக் கண்ட போது
“எனக்குள் சில மாற்றங்கள்” என்றேன்.
“கொஞ்ச நாட்களுக்குள்ளா என்றாய்” கண்சிமிட்டி
………………………………………………………..
என்னவென்று சொல்லுவேன்
என்னுடன் பேசிய நாள் முதல் தான்
உனக்கு நான் அறிமுகம்-ஆனால்
உன்னைப் பார்த்த நாள் முதலே
எனக்கு நீ அறிமுகமே…
………………………………………………….
நீ வரும் வரை மூளையில் பதியாமல்
முரண்டு பிடிக்கும் பாடங்கள்…
ஏன் இந்தக் காத்திருப்பு…
……………………………………………………
உன்னைக் காணாத நேரத்தில்
பொம்மையைப் பறி கொடுத்த சிறுவனைப் போல்…
ஏன் இந்தப் பரிதவிப்பு…
………………………………………………………….
எப்பொழுதும் இல்லாமல்
இப்பொழுது மட்டும்
கையெழுத்தில் தனிக்கவனம்…
ஏன் இந்தக் கவனயீர்ப்பு…
………………………………………………….
காய்ச்சலா, தலைவலியா என்று
தெரியாமலேயே
வயிற்றுக்குள் ஒரு பிசைவு…
ஏன் இந்த “Harmone” மாற்றம்…
……………………………………………………..
கையசைத்து நீ போகும் போதெல்லாம்
தொலைபேசி எண் கேட்க நினைத்து
தொண்டைக்குள் ஏதோ அடைக்க
வெறுமையாய் தலையாட்டுகிறேனே…
ஏன் இந்த இயலாமை…
……………………………………………………….
மார்க்கத்தின் வழியில் நீ
மறையுரையின் வழியில் நான்
நெறிப்படுத்தும் மதங்களா நமக்கும் சுவராக
ஏன் இந்த முரண்பாடு…


மறுவினைகள்

  1. kandupiduchuten un girlfriend kattayam oru muslim girl thaane. super un kavithai mattumalla
    nee kuda viyakka thakunthavan.
    anbudan,
    Akshyaaraja


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்