பாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி
பாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு
வாசமென்றால் என்னவென்று அறியா நீமூடா – என்
வசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா
*
*
ஊனன் கண்ட கனவு மெய்க்க
உடலை வருத்தி உழைத்தோம்
உவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை
உதறுகையில் திகைத்தோம்
*
*
பகைத்துக் கொண்டு வாழ்வதற்கா
வாழ்க்கையென்று நினைத்தோம்
பாசத்தோடு அரவணைத்து – உன்
வேசங்களை மறைத்தோம்
*
*
கருத் துரைக்க அழைத்திடுவாய்
மறுத் துரைத்த தில்லை
மறந்து போன நாட்களுண்டு; மனம்
மரத்துப் போன தில்லை
*
*
ஆசுகவி உரைத்த வர்கள்
கொண்ட தில்லை பட்டம்
ஆறுகவி புனையு முன்னே
உரைக்கிறாய் நீ சட்டம்
*
*
தோழமைக்கு நல்ல சான்று
கொடுப்ப தில்லை உயிரை
தோழனுக்கு தோழனாக
வாழ்வதே எம் வலிமை























//தோழமைக்கு நல்ல சான்று
கொடுப்ப தில்லை உயிரை
தோழனுக்கு தோழனாக
வாழ்வதே எம் வலிமை //
இரசித்தேன்….
நல்ல கவிதை……
——–
——–
அமுதன் நவின்றது:
நன்றி கோபி… தினக்குரல்ல பார்த்தேன்…கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்
எழுதியவர் கனககோபி நாள் நவம்பர்23, 2009
நேரம் 5:29 பிற்பகல்
நல்ல கவிதை.வழமையான உங்கள் கவிதை வடிவில் இருந்து மாறுபட்டிருக்கிறது.
——–
——–
அமுதன் நவின்றது:
நன்றி சேரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் கருத்தைக் கூறியுள்ளீர்கள். நன்றி.
எழுதியவர் cherankrish நாள் நவம்பர்23, 2009
நேரம் 6:17 பிற்பகல்
நல்ல தோழமை கவிதை..நட்பின் அருமையை உணர்த்தியது..நன்றி…
—–
—–
அமுதன் நவின்றது:
நன்றி புலிகேசி. நம் உணவில் கையிட்டு உண்டவர்கள் நமக்கு துன்பமிழைக்கையில் தான் நட்பு, துரோகமாகி விடுகிறது
எழுதியவர் Pulavanpulikesi நாள் நவம்பர்23, 2009
நேரம் 11:42 பிற்பகல்
நன்றாக இருக்கிறது. ஆனால் துரோகம் செய்பவர்கள் பற்றியும் நம்பிக்கைக்கு மாறாக நடப்பவர்கள் பற்றியும் எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்
——–
——–
அமுதன் நவின்றது:
நன்றி முத்துசாமி. நீங்கள் சொல்வது சரி தான்.
எழுதியவர் Muthusamy நாள் நவம்பர்24, 2009
நேரம் 3:52 பிற்பகல்
நன்றாகவுள்ளது நண்பரே..
——
——
அமுதன் நவின்றது:
நன்றி ஐயா
எழுதியவர் முனைவர்.இரா.குணசீலன் நாள் நவம்பர்24, 2009
நேரம் 5:20 பிற்பகல்