மாணவனே!
மன்றங்கள் ஆளும் நாயகனே..
வித்தில் மறைந்திருக்கும்
விருட்சம் போன்றவனே..
எரிபொருள் நிறம்பிய ஏவுகணை நீ
ஏவுதளமின்மையால் புகைகின்றாய்
பட்டை தீட்டா வைரம் நீ
படிப்பைத் தொடர்ந்து படி..படி..
சாதிய உணர்வினைக் கிளித்தெறி
சமத்துவ உள்ளத்தைப் படித்தறி
மோதிய தடைகளைத் தகர்த்தெறி – நீ
சரியெது? பிழையெது? …பகுத்தறி
மதாபிமானத்தை மறந்துவிடு
மனிதாபிமானத்தைப் பகிர்ந்து கொடு
சினத்தைப் பரண்மேலே வீசிவிடு
குணத்தில் சிறியோரைத் தூரவிடு
சபைகள் அறியட்டும் உன்புலமை
சரித்திரம் உரைக்கட்டும் பெருமைகளை
தோல்விகள் கண்டு நீ துவளாதே
துவண்டால் துயரங்கள் விலகாதே
வித்தில் மறைந்திருக்கும்
விருட்சம் போன்றவனே…
வீறுநடை பயிலநீ எழுந்து வந்தால்
விடியலும் உனக்காய்க் காத்திருக்கும்














கிரி நவின்றது:
YOUR A BEST TEACHER, BEST FRIEND, FOR TAMIL NADU
————————-
அமுதன் நவின்றது:
வருகைக்கும், மனம் திறந்த பதிவிற்கும் நன்றி கிரி
உங்கள் பின்னூட்டமே என் வளர்ச்சி.
பணிவன்புடன்
அமுதன்
எழுதியவர் GIRI நாள் மே26, 2009
நேரம் 9:33 பிற்பகல்