சொல்லடி சிவசக்தி
நாம் தமிழரடி – உலகின்
மறவர்குடி – என்று
சொல்லடி சிவசக்தி…
எட்டப்பர் களையெடுத்து
புல்லுருவிகளை யொழித்து
கருங்காலி மரமறுத்து – நமக்கென
நாற்காலி சமைவோமென்று…
சொல்லடி சிவசக்தி…
விட்ட நிலம் வீழவில்லை – தீ
சுட்ட இடம் ஆறவில்லை – காயம்
பட்ட மனம் மாறிவிட்டால் -உயர்
மட்ட பீடம் மகிழுமென்று…
சொல்லடி சிவசக்தி…
விளக்கோடு எரிந்து வீழ
விட்டிலல்ல நாங்கள்
விழுந்த இடம் பொசுக்கிவிடும்
விடிவெள்ளி தமிழனென்று…
சொல்லடி சிவசக்தி…
விதைத்த இனம் முளைத்து வரும்
மீண்டும் உனை சிதைத் தழிக்கும்
சாம்பலாக வீழ்ந்தாலும்..
பீனிக்சாய் எழுவோமென்று…
சொல்லடி சிவசக்தி…
விண்முட்ட..முட்டப் பறப்போம்
விடுதலையொன்றையே ரசிப்போம்
விரல்விட்டெண்ணும் நொடிகளுக்குள்
விட்டதை எல்லாம் ஜெயிப்போமென்று…
சொல்லடி சிவசக்தி…


















