என் உயிரினும் மேலான இந்திய நண்பர்களுக்கும்,சக பதிவர்களுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரதத் தாய் திரு நாட்டிற்கும், எல்லைகளில் காவல் செய்யும் இராணுவ வீரர்களுக்கும்,குறிப்பாக நண்பன் அக்னிராஜ் மற்றும் தமிழ் நாட்டின் இராணுவக் கிராமங்களான இராஜபாளையம் அருகில் உள்ள மீனாட்சிபுரம் மற்றும் பெருமாள்தேவன் பட்டியை வாழ்விடமாகக் கொண்ட (500க்கும் மேற்பட்ட) இராணுவ நண்பர்களுக்கும் எனது உளப்பூர்வமான சுதந்திரதின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். மேற்கூறிய இரண்டு கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் இந்திய இராணுவப் படையில் இணைவதையே இலக்காகக் கொண்டவர்கள் என்பதை பதிவர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுப்பற்று மிக்க இந்தியர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட நாட்களை மீட்டிப்பார்க்கிறேன்.
Friends, LOVABLE FRIEND இல் பதிவிடப்பட்டது