பொங்கும் நதியும்,
வங்கக் கடலும்
சங்கம் தழுவிய
தமிழும் இயற்கை…
மங்கும் மாலையும்,
மயக்கும் தென்றலும்
மனையொடு வளரும்
செடிகொடி இயற்கை…
காரிருள் மேகமும்,
சிமிட்டும் விண்மீனும்
கண்ணுக்கு விருந்தாகும்
சிற்றோடையும் இயற்கை…
மண்ணுக்கு மழையும்,
மரத்திற்கு இலையும்
பெண்ணுக்கு அழகூட்டும்
நகையும் இயற்கை…
பண்ணுக்கு இசையும்,
விண்ணுக்கு ஒளியும்
வலைப்பூவில் மலரும்
கவிகளும் இயற்கை











